Thursday 28 December 2017

தூதர்கள் செய்யும் தொண்டு :



ஸ்ரீ சிவ சித்தர் சின்னகுஞ்சி அம்மா சாய்மாதாவிற்கு நாம் மட்டும் அல்ல ஓர் அறிவு பிராணிகள் முதல் ஐந்து அறிவு உள்ள பிராணிகளும் தொண்டு செய்வதையும் மரியாதை செய்வதையும் சுற்றி எப்பொழுதும் நாய்களும் பல பிராணிகளும் சுற்றி அமர்ந்திருக்கும். நமது ஷீரடி சாய்பாபாவின் அவதாரமான அன்னை சாய்மாதாவிடம் இப்பிராணிகள் எப்பொழுதும் அமர்ந்து பசி ஆருவது உண்டு. அவைகளிடம் சாய்மாதா அன்பாக பேசுவதும் அவைகளின் அனுமதியோடு கண்விழித்தது முதல் அன்னை உறங்கும் வரை மட்டும் அல்லாமல் வெளியில் செல்லும் போதும் அவற்றின் அனுமதியை பெறுகிறார்கள். மற்றவர்களின் துயர் துடைக்கவும் இப்பிராணியுடன் அன்னை சாய்மாதா உரையாடுவது உண்டு, அவைகளும் அக்காரியத்தை முடிக்கும்வரை பட்டினி கிடந்து அக்காரியம் நன்றாக நிறைவேறியவுடன் நன்றாக பிறகே உணவு உண்ணும். இதைவிட அதிசயம் இப்பிராணிகள் அம்மையை வலம் வந்து நமஸ்கரித்து பிறகே அவரிடம் அமரும் என்பது அதிசயத்திலும் அதிசயமே அப்பிராணிகளிடம் அம்மா சாய்மாதா செல்ல பெயர் வைத்து அழைக்கும் அழகே தனி அப்பெயர் கொண்டு அழகாக அன்னை பாடவும் செய்வார். அன்னை சாய்மாதா பாமர மக்களோடு மக்களாகவும் பிராணிகளிடம் பிரியமாக பழகுவதையும் கண்கூடாக கண்டு மகிழலாம். வள்ளலார் காணும் ஜீவனங்கள் அனைத்தையும் காருண்ய ஜீவன்களுடன் கண்டார் என்பதை கண்கூடாக அன்னையிடமும் நாம் காணலாம். அன்பே அனைத்தும் பிறகு தான் எங்களுக்கு விசயம் புரிந்தது. அன்னை வெளியூர் பயணம் மேற்கொள்ளும் பொழுது ஏன் அங்கு அன்னதானத்தை முன்நிறுத்தி தானும் உணவு உட்கொண்டார்கள் என்பது ஆனால் மக்களோ தங்கள் அறியாமையாரல் அன்னை வாக்கப்பட்ட இடம் ஆதலால் அங்கே ஆசைப்பட்டதாக பேசியதும் உண்டு. அன்னை சாய்மாதா அங்கு இடம் வாங்கி அன்னதான கூடம் கட்ட வேண்டும் என்றும் தான் அங்கே தங்க போவதாகவும் கூறி வருகிறார்கள். திருவையாற்றில் பலபேருக்கு பல திருப்பங்கள் காத்து கொண்டு இருக்கிறது. அன்னையின் திருப்பாதம் பட்டவுடன் பொன்னாவரையும் பொன் பூமியாகும்.

No comments:

Post a Comment