Thursday 28 December 2017

பலகாரத்தில் பரிகாரங்கள் :



ஸ்ரீ சிவ சித்தர் சின்னகுஞ்சி அம்மாவும் (சாய்மாதா) ஷீரடி சாயும் ஒன்றே என்பதற்கு உதாரணத்தில் ஒன்று, உங்கள் பார்வையில் பாபா கோதுமை மாவை அரைத்து அதை ஊரின் எல்லையில் கொட்டி நோயை விரட்டினார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே அதேப்போலவே நமது சாய்மாதாவும் அரிசி, காய் கனிகள், பணம், காசு என பொருட்களை சிலரிடம் சென்று கேட்டு வாங்கி ஊரின் எல்லையில் கொண்டு எரிந்துவிடுவார். அவர் எரிவது மலேரியா மஞ்சள்காமாலை மற்றும் புதிதாக தோன்றும் நோய்களைதான். இன்று அன்னை நடப்பது இல்லை என்றாலும் தான் மலஜலம் கழிக்கும் போது கூட நமது நலன் கருதி நடக்க முடியாமல் நடந்து தீயசக்திகளை விரட்டிட தீய சொற்களால் வசைப்பாடுவார்கள் என்பதில் ஐயம் இல்லை தன்னை காண வரும் பக்தர்களிடம் அம்மா சிலப்பொருட்களை வாங்கி தரும்படி கேட்பார்கள். மூக்கு பொடி, புகையிலை, சுருட்டு, டீ, பிஸ்கட், கொட்டைபாக்கு, விறகு என வாங்கி வரசெய்து தனது துணி என்னும் அக்னிகுண்டத்தில் போட்டு எரித்து விடுவார். வருகின்றவர்களின் கருமாக்களுக்கு இதுவும் ஒரு பரிகாரம் என்பது அன்னை சாய்மாதாவின் வாய்மொழியாகும். அன்னதானம் நடக்கும் பொழுதும் கூட மனிதனின் பசிபோக்குவதோடு நில்லாமல் பாவங்களையும் போக்குகிறார். மனிதனுக்கு மட்டும் அல்லாமல் ஊருக்குள் இருந்து கொண்ட மனிதர்களுக்கும் பிராணிகளுக்கும் தொல்லை தரும் அமானுசிய சக்திகளுக்கும் கூட பரிகாரங்கள் செய்து அதனை சாந்திபடுத்தி தன் கட்டுக்குள் வைத்திருக்கிறார் எப்படி எனில் அவைகளுக்கும் அவைகளின் விருப்ப உணவுகளின் மூலம் சமைத்த உணவினை எல்லைக்கு அப்பால் சென்று கொட்டிவிட்டு வருவார் இப்படி அன்னை சாய்மாதாவை பற்றி சொல்ல எல்லை இல்லை

No comments:

Post a Comment