Thursday 28 December 2017

ஸ்ரீ சிவ சித்தர் சின்னகுஞ்சி அம்மாவின் கையொப்பம்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுக்கா, பூந்தோட்டம் அஞ்சல் மேலருத்திர கெங்கை, சின்னகுஞ்சி அம்மா அவர்களின் அற்புத மகிமைகள்:

ஸ்ரீ சிவ சித்தர் சின்னகுஞ்சி அம்மாவின் கையொப்பம்.


சின்ன குஞ்சி அம்மா! என்று அழையுங்கள் என்னை. என்பது அம்மாவின் வாக்கு. ஆனாலும் நாங்கள் அம்மாவை காண்பது சாய்மாதா அனுசியா தேவியையும் அவரால் அவதரித்த அவதார புருஷர்களையும் தான். நான் மீண்டும் அவதரிப்பேன். என்று தசாவதாரம் எடுத்து நம்மை என்றும் காக்கின்ற காக்கும் கடவுளாகிய ஸ்ரீ மஹாவிஷ்ணு மட்டுமின்றி தாய்க்கும் மேலான நமது குருமார்களும் தான் சொன்னதை நிறைவேற்றி சொர்க்க பூமியாக்க அவதாரங்களும் அவ்வபோது குருமார்கள் தோன்றுகிறார்கள். நாமும் அவர்களை நமது பூர்வ ஜென்ம புண்ணியங்களின் பலன்களால் அறிந்து கொள்கின்றோம். ஒவ்வொரு யுகத்திற்கும் ஒருமுறைதான் கடவுள்கூட அவதாரம் எடுத்திருக்கின்றார். ஆனால் கடவுளின் உண்மையான பிள்ளை இறை தூதரோ சீரடி சாய்பாபா மட்டும் ஒரே யுகத்தில் பல அவதாரங்கள் நம்மை காக்க எடுத்திருக்கின்றார் என்றால் அவரது கருணையை எதனுடன் ஒப்பிட முடியும் என்று சொல்லுங்கள் பார்ப்போம். சாய்பாபா என்றால் உலகத் தந்தை என்றல்லவா பொருள்? தந்தையை விட தாயின் தியாகமும், அன்பும் மிகமிக அற்புதமானது மட்டுமல்லாது அவசியமானதும் கூட. அந்த உலக தாயாகவும், நமது சீரடி பாபா சாய்மாதாவாக நமக்காக சின்னகுஞ்சி அம்மாவாக அவதரித்து விட்டார். கலியுகத்தில் கல்கி அவதாரம் எடுப்பதற்கு முன் கருணை உள்ளம் கொண்டு கண்ணீர் துடைத்து கவலையை நீக்க, தன் கடமைகளை செய்ய சீரடி சாய் தாயாகி நம்முடன் வாழ்ந்து வருவதோடு மட்டுமல்லாது நம்மை வாழவைத்தும் வருகிறார் என்பதை கண்கூடாக கண்டறியலாம். சாய்பாபா அவதரித்தது சீரடி என்றாலும் அவரது வாழ்ந்த இடம் நம்பிக்கை, பொறுமை, விடாமுயற்சி என்ற நம் இதயங்களில்தான்! இன்று மீண்டும் நம்முடன் நமக்காக புண்ணியபூமி பூந்தோட்டத்தில் சகஸ்ரஸ்தலமாக பூத்திருக்கிறார்! ஆம் வாருங்கள் சரணடைவோம். குரு பாதத்தில்! சாய்மாதா சின்னகுஞ்சி அம்மாவின் முன் அவதாரத்தில் சீரடி சாய் என்பதை உணர்த்த அவர் செய்த அற்புதங்களை உணர்த்த ஸ்ரீசிவ சித்தர் சீரடி சாய்பாபா தோன்றிய புண்ணிய பூமியாகிய பூந்தோட்டத்தில் கோயில் கொண்டு அமர்ந்துள்ளார். அதுமட்டுமில்லாமல் நம்மை வாழவைத்து நம்முடன் வாழ்ந்தும் வருகிறார் சத்சரிதத்தில் மட்டுமே அவருடன் வாழ்ந்த நாம் அவருடன் வாழவில்லையே என்ற ஏக்கத்தை தீர்க்க வாருங்கள் பூந்தோட்டம் சாய்மாதா சின்னகுஞ்சி அம்மாவுடன் குருசேவையில் வாழலாம்

No comments:

Post a Comment