Thursday 28 December 2017

தாயின் கருணை:





சின்ன குஞ்சி அம்மா என்று உரிமையோடும், உண்மையோடும் அழைக்கின்ற ஒவ்வொரு ஒலிக்கும், உணர்வுகளுக்கும் தன் ஒரே ஒரு கருணை பார்வையால் நம் வாழ்வில் ஏற்படும் பல இன்னல்களை தீர்க்கின்றார். இன்பங்களை தருகின்றார். ஆம். சித்தர்கள் தங்கள் பார்வையாலேயே பல அற்புதங்களை செய்திருக்கின்றார்கள் என்பதை நாம் படித்திருக்கின்றோமே தவிர இன்றே பூந்தோட்டத்தில் அனுபவிக்கின்றோம். தாயின் கருணையால், அபிராமியின் கடைக்கண் பார்வையால் கிடைக்கின்ற அனைத்தும் அம்மையின் அருட்கண் பார்வையால் அடைந்திடலாம். அன்னை சாய்மாதாவை காண வரும்போது அவர் முன் வணங்கி அமைதியாக சற்று நேரம் அமர்ந்தாலே போதும். அன்பாக அன்னை சாய்மாதாவே அழைத்து நம்முடன் அன்பாகவும், மரியாதையாகவும் பேசுவார். தனக்கு எல்லாம் தெரியும் என்று பேசும் பக்தர்களிடம் கூட அம்மா தன்னிடம் உரிமையுடன் பேசுவதாக அவர்களை மதித்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரையும் ஆச்சி, அய்யா என்ற இருவார்த்தைகளிலேயே அழைப்பார். அப்படி எவரையேனும் அவர் திட்டுகிறார் என்றால் அவரே முதலில் மரியாதைக்குரியவர் ஆவார். ஏனென்றால் திட்டு வாங்கும் பக்தரின் புண்ணியம் அன்றே அவருடைய பாவங்களை போக்குவதாகும். அம்மாவின் அவமரியாதையால் அல்ல. அருட்பார்வையால் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அம்மாவின் அருட்பார்வை நம்மேல் படவேண்டும் என்று நினைத்தால் அவரின் கருணை இருந்தால் மட்டுமே நாம் காண இயலும். தாயின் கருணையை பெற தவமிருக்க வேண்டாம். அவளின் தயை இருந்தால் போதும். தன்னிடம் தானாக நம்மை அழைத்துக் கொள்வார். தம்மிடம் வரும் பக்தர்கள் என்றும் பசியோடு இருப்பதை அன்னை சாய்மாதா விரும்புவதில்லை. அதனால் அன்னதானம் மட்டுமல்லாது தேனீராலேயே பசியாற்றிவிடுவார். ஆம். தாய் தன் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டி பசி தணிப்பதை போல் அன்னை சாய்மாதாவின் கருணையால் பசியோடு ஒரு ஜீவன் கூட அன்னையை விட்டு அகன்றதே கிடையாது. குரு பார்க்க கோடி நன்மை என்ற மெய்வார்த்தைக்கு ஏற்பட தாயின் கருணைப்பார்வையால் பசி நீங்கி பசியால் வருகின்ற பாவம் நீங்கி, பாவத்தால் வருகின்ற நோய் நீங்க, பாத கமலத்தில் சரணடைவோம்.

No comments:

Post a Comment