Thursday 28 December 2017

இயற்கையும் இறைதூதரும்




சின்ன குஞ்சி அம்மா சாய்மாதா அவர்கள் கூத்தனூரில் யாருடைய வீட்டின் முன்பும் எவ்வளவு மலைபெய்தாலும் ஒரு சாக்கு கூட இல்லாமல் மாலை சாரலில் திண்ணையில் அமர்ந்து இருப்பார்கள் உறங்கும் நிலையிலும் கூட சின்ன மறைப்பு கூட இல்லாமல் வெற்று உடம்புடன் காலம் கழித்ததுண்டு தன்னை காண வரும் பக்தர்களிடம் அடுப்புகரி, தீப்பெட்டி, மண்ணெண்ணெய் வாங்கி தரும்படி கேட்பார்கள் சீரடி சாய்பாபா துவாரஹாமாயியில் அமர்ந்து துணி என்னும் அக்கினி குண்டத்தில் மக்களின் கருமாக்களையும் சேர்த்து எரித்தார் இதற்காக எப்பொழுதும் விறகு சேகரிப்பதிலும் ஈடுபடுவார், நம் சாய்மாதாவும் எரிபொருட்களை மக்களிடம் கேட்டு அக்னியில் அவர்களின் கருமத்தை எரிப்பதோடு மட்டுமல்லாமல் தீய சக்திகளிடமிருந்தும் நம்மை காத்துவருகிறார் இதில் சில பக்தர்கள் அன்னை சாய்மாதாவிற்கு காகிதங்களையும் ஓலைகளையும் சேகரித்து கொடுப்பதுண்டு சாய்மாதாவின் துணியோ ஒரு சிறிய மண் சட்டியாகவோ அல்லது வெறும் தரையாகவோ இருப்பதுண்டு எப்பொழுதும் அது எரிவதும் உண்டு இதில் அதிசயம் என்னவென்றால் பச்சை மட்டைகளும், தலைகளும் ஆளுயர எரிவதுண்டு மலையில் சாரலுடனும், நெருப்பில் தனலுடனும், பூமியை படுக்கையாகவும் இயற்கையை இருக்கையாகவும் கொண்டு இயல்பாக இயற்கையுடன் இணைந்து வலம் வரும் இறைதூதரே எங்களின் இறைவன் ஆவார் மழை நாட்களில் அக்னிக்கு அருகில் இருந்துவிட்டு அம்மா வெளியில் நடமாடும் பொழுது காண்பவர்களே கவிதை எழுத வைக்கும்.

மழை காலத்து மழைமேகமாய் புகை பிடித்த மேனியுடன் புலலென 

வரும்பொழுது புண்ணியம் செய்தேன் தாயே உன்னை கண்டு விட்டால்

உன் கருமை படர்ந்த தேகத்தில் எங்கள் கர்மங்கள் தொலிந்ததென்று

வெற்றுகாலுடன் வெய்யலில் நடக்கையில்

பகட்டுடையார் பட்டென்ற காலில் விழுவர்

வெற்றுடம்புடன் வீதியில் நடக்கையில்

சேதி அரியாதவர் விதியுடன் நடந்தார்

அதே ஊரில் வசித்து வரும் அம்மாவின் பக்தர் ஒருவர் ஒரு சமயம் வீடு கட்டி வரும் பொழுது மழை பெய்வதை போல் மேகங்கள் கருத்திருந்தன இச்சமயத்தில் வீட்டின் கூரை பிரிந்திருந்த நிலையில் மழை பெய்தால் வீட்டின் உள் தண்ணீர் புகுந்து விடும் என்பதனால், அம்மையார் அன்னை சாய்மாதாவிடம் ஓடி செனட்று அம்மா மழை பெய்வதை ஒரு இரண்டு நாட்களுக்கு நிறுத்திவிடுங்கள் என அழுது கொண்டே கோரிக்கை வைத்தார். அன்னை சாய்மாதாவிற்கு என்றும் பசியாற்றி வரும் அந்த அம்மையாரின் கோரிக்கையை நிறைவேற்ற அன்னை சாய்மாதா மழை நின்றுவிடும் மழை பெய்யாது ஆச்சி என்று அருள் மொழிந்தார், அதேபோல் இரண்டு நாட்களுக்கு மழையும் பெய்யவில்லை பெய்து கொண்டிருந்த மழையும் நின்றுவிட்டது அன்னை சாய்மாதா மேல் அன்பு செலுத்துபவர்கள் மேல் என்றுமே அன்னை தனி அன்பு வைத்திருப்பது சொல்லி மிகை ஆகாது. அன்னையிடம் தன்னுடைய கவலையை கூறுபவர்களிடம் அன்னை சொல்லிதான் தீர வேண்டும் அருள் வாக்கு. அன்னையிடம் சொன்னாலே போதுமே அன்னை சாய்மாதாவின் அருள் மொழியில், மழை வரும் என்றால் மழை, புயல் என்றால் புயல், வெள்ளம் என்றால் நம்முடன் பேசும் பொழுதே வானிலை அறிக்கையையும் சொல்வதுண்டு. இயற்கையே இறைவன் என்ற, பகுத்தரிவினாலும் பகுத்தரிந்து கொண்டாள் இறைதூதனே இறைவன் என்பதை.

No comments:

Post a Comment