Thursday 28 December 2017

அயன சயனமும், அமானுஷ்யமும்:




சின்ன குஞ்சி அம்மா சாய்மாதா சில சமயத்தில் இரவில் உறங்கும்பொழுதும் சில சமயங்களிலும் தன் நிலை மாறி இருப்பார்கள். உறக்க நிலையில் விழிப்புடன் இருப்பது ரகசியம் பேசும் குரல்களில் அமானுஷ்யங்களுடன் பேசுவதும், அமானுஷ்யங்களை பற்றி பேசுவதுமாக இருப்பார்கள். ஒரு நாள் இரவில் அம்மா சாய்மாதா அவர்கள் பேசும் பொழுது திடீரென்று கொலுசு சத்தம் கேட்டது. அதற்கு அம்மா திருவையாற்றின் ஓரமாக வெள்ளைப்புடவையில் தலைநிறைய பூவுடன் மோகினி பிசாசு நேராக சென்று சுடுகாட்டுக்குள் போகிறது என்பார்கள். திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டத்தில் அயன சயனத்தில் இருந்தபடியே திருவையாற்றில் நடப்பதை சொல்லும்பொழுது இங்கு அதன் ஆதாரத்தை உணரலாம். அம்மையாருடன் வெளியில் செல்லும் பொழுது விபத்தில் இறந்தவர்கள் அம்மையாருடன் செல்பவர்களை உற்றுப்பார்ப்பதாக கூறுவார்கள். இறந்தவர் யார் என்பதையும், எந்த நிலையில் இறந்தார்கள் என்பதையும் கூறுவார்கள். விசாரித்தால் அனைத்தும் உண்மையே என்பது புலப்படும். இதுமட்டும் இல்லாமல் நமது உறவினர், நண்பர் மற்றும் நமக்கு தேவையானவர்களின் மரணம் எப்படிப்பட்ட மரணம் என்பதையும், அவர்கள் மீண்டும் பிறந்து விட்டார்களா என்பதையும் இல்லையெனில் தெய்வநிலையை மறுபிறவி உண்டா இல்லையா என்பதைனையும் உண்மை அரியும் விதமாக நமக்கு உணர்த்துவார்கள் சடங்குகளும் சம்பிரதாயங்களும் தேவை என்பதனையும் அவருடன் தனிமையில் இருக்கும்பொழுது குரு சேவையில் நாம் உணரலாம், ஆண்டவனின் கட்டளைபடி அமானுஷ்யங்கள் அடக்கி, அதனால் ஏற்படும் துன்பத்தில் இருந்து அனைவரையும் அன்னை சாய்மாதா நம்மை காப்பாற்றி வருகிறார்,

No comments:

Post a Comment