Thursday 28 December 2017

ரிஷி மூலமும் நதி மூலமும் :




சின்ன குஞ்சி அம்மாவை போல் பல அவதார புருசர்களுக்கும் இந்த ரிசிமூலம் நதி மூலம் பொருந்தும். தன் தாய் தந்தை, தான் வாழ்ந்த முறை இவை மட்டும் அல்ல ரிசி மூலமும் நதி மூலமும் இன்னல்களையே இறைவனாகவும், துன்பங்களையே துணையாகவும் கொண்டு வைராக்கியத்துடன் வாழ்பவர்களே இறைதூதர்கள் மக்களின் இன்னல்களை தீர்க்க மனித ரூபத்தில் பல இன்னல்களுடன் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். இறைதூதர்கள் இருட்டையே காவலாகவும், காடுகளையும் வயல்களையும் வீடுகளாகவும், அமானுஸ்யங்களையும் விச ஜந்துக்களையும் துணையாக கொண்டு வாழ்ந்தவரே நம் சாய்மாதா, இன்றே, மக்களுடன் நமக்கு துணையாக வாழ்கிறார் அன்னை பட்ட இன்னல்களுக்கு அளவே இல்லை, பற்றில்லாத நிலையே பல துன்பங்களை அவருக்கு தந்தது, ஒரு பெண்ணாக பிறந்து தனக்கு என ஒருமுல ஆடை கூட அணியாத அன்னைக்கு சிறுவர்களின் கல்லடியும், பெரியவர்களின் கண்ணடியும் மட்டுமல்லாது மனித ரூபத்தில் அமானுஸ்யங்களின் அட்டகாசத்தையும் அனுசரித்தே நடந்தார், அன்னை சாய்மாதாவை அப்படி அடித்தவர்களில் உடனடியாக உயிருடன் இல்லை, இன்றோ தன்னை விரட்டி அடித்தவர்களின் வீட்டிலேயே தங்கியிருந்து தன்னை வணங்கவும் வைத்தது கண்கூடாக நாம் காணும் காட்சியே. ஒருவேளை உணவுக்கு ஒரு காலுடன் நிற்கின்ற கொக்கு கூட தன் தன்மானத்தோடு பசியாருக்கிறது, உலக மக்களின் பசி தீர்க்க ஒருவேளை உணவுக்காக ஒரு தவமே இருந்தவர் நாம் அன்னை சாய்மாதா ஒரு வாய் சாப்பாட்டிற்கு கால்கடுக்க மணிகணக்கில் காத்திருந்தார்.

அன்று நல்ல அரசியல் தலைவர்கள் வகுத்த நல்ல நல்ல செயல் திட்டங்களான அன்னதானத்தையும் (மதிய உணவு) ஆமோதித்த அன்னை அதை உண்டதில் மூலம் நாம் அறியலாம் இன்று நம்முடன் உறையாடும் பொழுது அன்னை உணவு இல்லாமல் ஏற்படும் கஷ்டங்களை பகிர்ந்து கொள்வதோடு மட்டும் இல்லாமல் இன்றைய அரசியல் அநியாயங்களையும் பேச தருவதில்லை பசி நேரத்தில் ஒவ்வொரு வீட்டிலும் கொதி தண்ணீரே முக்கால் நேர மதிய உணவாகியிருக்கிறது தெரிகிறது. இன்று அன்னையிடம் அளவில்லாத அன்னம் இருந்தும் அனைவரையும் சாப்பிட வைத்து தாய் அன்போடு அழகு பார்க்கிறார். அதுமட்டுமல்லாது பசியாற்றி பின்பு பசியாருகிறார் நம் சாய்மாதா. ஆனாலும் கஞ்சியையும் கொதி தண்ணீரையும் பழைய சாதத்தையும் இன்றும் விரும்பி உண்ணுகிறார். விளைசோறு, மனைசோறு, பிணைசோறு என்ற மூன்று விதமான அன்னங்களை உண்டு பசியாறுகிறாள். மனிதன் இவற்றினால் வரும் பயன்களையும் அனுபவிக்கின்றான். பிறர் வீட்டில் சாப்பிடும் பொழுதும் விடுதிகளில் உணவு அருந்தும் போதும் தீட்டு வீடுகளில் சாப்பிடும் பொழுதும் பரிமாறுபவர்களின் எண்ணங்களை உணவின் மூலம் நம்மை வந்து அடையும். அத்ன நன்மை தீமைகள் நம்5 சார்ந்தே இதன் மூலம் அடையும் துன்பங்களாலும், துயரங்களையும் துடைப்பது குரு பீடத்தின் அன்னதானம் மட்டுமே குரு பீடத்தில் கொடுப்பவரும் இறைவனுக்கு அர்பணித்தால் நல்லது நடக்கும் என்ற எண்ணத்தோடும் பெறுபவனும் இதை உண்டால் நல்லதே நடக்கும் என்ற எண்ணமும் இறைபிரசாதம் என்ற பக்தியுமே ஒரு மனிதனுக்கு மருந்தாக மட்டும் இல்லாமல் ஒரு4 மனிதனை மனிதன் ஆகிறது. குரு பீடத்தின் அன்னதானத்தை உண்பதன் மூலமாக நல்ல மனதோடு இருக்க வேண்டும் என நினைவு நீ ஒரு நல்ல மனிதனாவாய், ஒரு நல்ல மனிதனாக வாழவேண்டும் என்று நினை, நீ ஒரு நல்ல மகானாவாய் ஒரு மகானாக வாழ வேண்டும் என நினைத்தால் நீ இறைவனாகவே அவதரிப்பாய் ஏனெனில் ரிசிமூலமும் நதி மூலமும் சரித்திரம் படைக்கட்டும். ஜெய் சாய்மாதா.

No comments:

Post a Comment